இபிஎஸ்க்கு கிடைத்த அடுத்த வெற்றி…. தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 11:54 am

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகாரமாகி இறுதியில் கோர்ட் படிக்கட்டுகளை ஏறி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அந்த திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ரிட் மனு தக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கையும் டெல்லி ஐகோர்ட் முடித்து வைத்தது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!