சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தலைவர் கைது ; பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி திட்டம்… என்ஐஏ அதிகாரிகள் அதிரடி!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 4:41 pm

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சையது நபி என்பவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என பல மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபியை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதோடு, போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃபி என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!