களையெடுக்கப்படும் சட்டவிரோத கும்பல்… இந்தியா முழுவதும் 70 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 9:01 am

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் போதைப்பொருட்கள் மற்றும் கள்ளநோட்டுக்களின் புழக்கமும், பயங்கரவாத சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே, இதனை தடுக்கும் வகையில், டெல்லி, பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் சத்தீஷ்கரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?