பொங்கல் முடிந்து சென்னை திரும்ப இரவு நேர பேருந்துகள் : தேதியுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 10:16 pm

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஜன.16ம் தேதிமுதல் 18ம் தேதி வரை போக்குவரத்துத்துறை சார்பில் 15,619 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் மூன்று நாட்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 4,334 பேருந்துகளும், சென்னையை தவிர மற்ற இடங்களுக்கு 4,985 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் வசதிக்காக ஜன.17ம் தேதி செவ்வாய்க்கிழமை மற்றும் 18ம் தேதி புதன்கிழமை ஆகிய நாட்களில் மாலை மற்றும் இரவு நேரத்தில் 50 பேருந்துகள் மற்றும் 18ம் தேதி மற்றும் 19ம் தேதி ஆகிய இரு நாட்களில் அதிகாலை 125 பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!