கரகாட்டக்காரன் பட வாழைப்பழக் கதை மாதிரி பேசுறாரு நிதியமைச்சர் ; நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 11:58 am

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக நாடாளுமன்றத்தில் நிவாரணம் கேட்டால், கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழக் கதையை மத்திய நிதியமைச்சர் சொல்வதாக நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நான்காவது முறையாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று பல்வேறு கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும் படிக்க: Gold and Silver rate ; புதிய உச்சத்தில் தங்கம் விலை… ரூ.52 ஆயிரத்தை எட்டி விற்பனை ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

இந்நிலையில், உதகையை அடுத்த மஞ்சூர் பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு படுகர் இன மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வாங்கி கொடுத்த ஆ.ராசாவிற்கு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க: கைகட்டி வேலை பார்த்த இந்த ஆட்டுக்குட்டி… இப்ப ரொம்ப துள்ளுது ; அண்ணாமலையை விமர்சித்த திமுகவின் ஆர்எஸ் பாரதி..!!!

இதனைத் தொடர்ந்து, பேசிய ஆ.ராசா, தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று நோய் மற்றும் அரசு 5 லட்சம் கோடி கடன் பெற்றிருந்த நிலையில், மழை வெள்ளம் என பல்வேறு பாதிப்புகளுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள் அனைத்தையும் சீர் செய்தவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

மேலும், தமிழகத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதியை வழங்க நிதியமைச்சரிடம் கேட்டபோது, அதுதான் தமிழகத்திற்கு 1500 கொடுத்தோமே என்றும், இல்லை வெள்ள நிவாரண நிதியில் எங்களது நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டதற்கு, மீண்டும் மீண்டும் அதுதான் அந்த 1500 என்று கூறியதாகவும், கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழம் கதை போல் நிதி அமைச்சர் கூறியதாக, அவர் பேசினார்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!