பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் மீண்டும் பதவியேற்கிறார்.
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது. இருப்பினும், இருகட்சிகளிடையே கடந்த நாட்களாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.
இதனால், பாஜக சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அம்மாநில ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் கடிதம் அளித்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாகவும், ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி, பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும், மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.
இந்நிலையில், பாட்னாவில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார்.
இதனிடையே, நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக பீகார் மாநில பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.