தமிழகத்தில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு: 2வது நாளாக உயிரிழப்பு இல்லை…!!

Author: Rajesh
16 March 2022, 9:57 pm

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2வது நாளாக உயிரிழப்பு இல்லாதது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 161 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையில் 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 873 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!