‘இனி ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி’: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!

Author: Rajesh
19 May 2022, 6:52 pm

திருவனந்தபுரம்: கேரளாவில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது

திருமண நிகழ்வுகளில் போட்டோஷூட்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலை லாபகரமானதாக மாற்றும் நோக்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருமண போட்டோஷூட்களுக்கு குறைவான கட்டணத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஒரு மெட்ரோ ரயில் பெட்டிக்கு அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம் எனவும், நிற்கும் ரயிலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஓடும் ரயிலுக்கு 8 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும், 3 மெட்ரோ ரெயில் பெட்டிகள் வேண்டுமானால் நிற்கும் ரெயிலில் 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும்.

ஓடும் ரெயிலுக்கு ரூ.17,500 செலுத்த வேண்டும். வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ரெயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும். இந்த சேவை ரயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?