4 வழி மாநில சாலைகளில் இனி டோல்கேட் இல்லை…? தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு பேசுகையில், அதிகப்படியான டோல் கேட்டுகள் அமைக்க தமிழ்நாடு அரசு எதிராகவே உள்ளது. இதுவே எங்கள் நிலைப்பாடு. அதிலும் மாநில சாலைகளை தேசிய சாலைகளாக விரிவுபடுத்தி அதில் டோல் அமைப்பதை ஏற்க முடியாது.
மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் 4 வழி சாலையாக அமைக்க வேண்டும். விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பெயரில் சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கே பல சாலைகள் இப்படி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் எதிலும் டோல்கள் போடப்படவில்லை. மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இங்கே விரிவுப்பணிகள் நடந்தாலும் கூட டோல்கள் போடக்கூடாது என்று கூறியுள்ளோம்.
இங்கே குற்றஞ்சாட்டிய எம்எல்ஏ மாநில சாலையில் டோல் கேட் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அது என்ன சாலை.. மாநில சாலை விரிவுபடுத்தப்பட்டு பின் மத்திய அரசு போட்ட டோல் கேட்டா என்று பார்க்க வேண்டும். அதை பார்த்து நாங்கள் சரி செய்வோம்.
அதேபோல் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று இங்கே வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம் சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் முக்கியமான டோல்கேட் ஒன்றை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணம் செய்ய முடியவில்லை.
இந்த சாலையில் வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் இங்கே ஊர்ந்து செல்லும் போதும் கூட இங்கே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.