பிறந்து 4 நாட்களே ஆன சேய், தாயை தூக்கிக் கொண்டு ஆபத்தான பயணம் : சாலை இல்லாததால் அவலம்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 4:29 pm

ஆற்றில் ஆபத்தான பயணம் மேற்கொடு மருத்துவமனைக்கு தாய், சேயை தூக்கி கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் சுந்தரி கொண்டா கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது.

அந்த கிராமத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் மண் சாலை வழியாக ஆறு ஒன்று ஓடும் நிலையில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த கிராமத்திற்கான போக்குவரத்து வசதி முழு அளவில் துண்டிக்கப்படும்.

சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக அங்குள்ள ஆற்றில் மழை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அது கிராமத்தை சேர்ந்த பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

எனவே குழந்தையுடன் தாயையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அந்த பகுதியில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகின் கீழ் இருக்கும் சுவற்றின் மீது மிகவும் ஆபத்தான நிலையில் குழந்தையை தூக்கி கொண்டு ஒருவர் முன்னே செல்ல மற்றொருவர் அந்த தாயை தோளில் அமர செய்து ஆபத்தான வகையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

அதிகாரிகள் மனது வைத்து தங்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது அந்த கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!