கூச்சம், வெட்கம் இல்ல.. நீங்க சொல்வதை நம்ப மக்கள் என்ன சும்பன்களா? ஆளுநர், அண்ணாமலை மீது காங்., பிரமுகர் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan5 May 2023, 10:51 am
தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆங்கில நாளிதழுக்க பேட்டியளித்த ஆளுநர் ரவி, திராவிட மாடல் என்பது அரசியல் வாசகம் மட்டுமே, காலவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கும் நிலையில் எப்படி தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என கூறிமுடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தமிழக அரசு சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் கமலாலயத்தில் பணியாற்ற வேண்டியர் ஆளுநர் மாளிகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்கு வந்தவர் போலத்தான் உணர முடிகிறது எனவும் விமர்சிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் ஆளுநரை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அண்ணாமலைக்கும் ஆளுநர் ரவிக்கும் யார்அதிகமாகப் பொய்சொல்வது என்பதில் போட்டாபோட்டி..
ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு 50%க்கு குறைவாகவே திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.(உண்மையில் தமிழக அரசு 134%நிறைவேற்றி ஒன்றிய அரசிடம் பரிசுவாங்கியுள்ளது)
சத்திரபதி சிவாஜி ஆங்கிலேயர்களிடமிருந்து மண்ணையும் நம் கலாச்சாரத்தையும் பாதுகாக்க தமிழ்நாட்டின்மீது படையெடுத்தார்.
(உண்மையில் சிவாஜி இறந்து நீண்டநாட்குக்கு பின்னரே ஆங்கிலேயர்கள் நம்நாட்டுக்கு வந்தனர்)
கூச்சமும்,வெட்கமும் இல்லாமல் பொதுத்தளங்களில் பொய்சொல்வது இவர்களது வாடிக்கை என்பது ஒருபுறம் அதைவிட நம்மால் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றம்.
இவர்கள் இருவரும் தமிழ்நாட்டு மக்களை விபரம்தெரியாத சும்பன்கள், நாம் எதைச்சொன்னாலும் அவர்கள் நம்புவார்கள் என்று இந்த இரண்டு பிரகஸ்பதிகளும் நம்புவதுதான் என பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார்.