நேரமும் ஒதுக்கல, பேச்சுவார்த்தையும் நடத்தல : பாஜகவுடன் கூட்டணி குறித்த தகவலுக்கு தேமுதிக மறுப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 5:06 pm

நேரமும் ஒதுக்கல, பேச்சுவார்த்தையும் நடத்தல : பாஜகவுடன் கூட்டணி குறித்த தகவலுக்கு தேமுதிக மறுப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்ற நிலையை எட்டியுள்ளதாக தே.மு.தி.க. கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தே.மு.திக. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நேரம் தரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 217

    0

    0