ஒரு பைக் ஸ்டன்ட் கூட நடக்கவில்லை… நன்றி கூறிய காவல்துறை : தலைநகரில் அமைதியாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 9:55 am

ஒரு பைக் ஸ்டன்ட் கூட நடக்கவில்லை… நன்றி கூறிய காவல்துறை : தலைநகரில் அமைதியாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டு என்றாலே இளைஞர் பட்டாளம் ஒன்று சேர்ந்து ஆப்பரித்து கொண்டாடுவர். குறிப்பாக பைக் ஸ்டன்ட் என ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவர்.

ஆனால் இந்த முறை அது நடைபெறவில்லை, போலீசார் சிறப்பாக திட்டமிட்டு பீச் செல்லும் சாலைகளில் பேரிகேட் போட்டு வாகன ஓட்டிகளை சோதனை செய்த பின்பே அனுப்பினர் . முக்கியமாக பைக்கில் செல்லும் நபர்களை நன்றாக சோதனை செய்த பின்பே அனுப்பினர்.

இதனால் சாலை விபத்துகள் தடுக்கப்பட்டன. சாலைகளில் முக்கிய இடங்களில் [பேரிகேட் போடப்பட்டு இருந்தது. போலீசார் தற்காலிகமாக டென்ட் போட்டு இருந்தனர். இதன் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்வது தடுக்கப்பட்டு விபத்துகளும் தடுக்கப்பட்டன.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே பீச்கள் அனைத்தும் வெறிச்சோடின. இரவில் போலீசார் அனுமதி மறுப்பு காரணமாக – பீச்கள் அனைத்தும் மூடப்பட்டன.

திருவான்மியூர், பெசன்ட் நகர், மெரினா பீச்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின. அதே சமயம் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ