ஒரு அமைச்சர் கூட தொகுதி பக்கம் வந்ததே இல்ல.. ஆனா இப்போ.. வாயை திறந்தாலே பொய் : இபிஎஸ் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2023, 9:03 pm

ஈரோடு மாவட்ட கனிராவுத்தர்குளத்தில் எடப்பாடி பழனிசாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இதனை சரி செய்ய வேண்டும் என்று ஈரோடு அதிமுகவினர் கோரிக்கை அளித்தனர். அதன் பின்னர், ரூ.484 கோடி அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் செய்யப்பட்டது.

அதனை நானே நேரடியாக திறந்து வைத்தேன். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தது அதிமுக தான். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சையளிப்பதற்காக அதிமுக ஆட்சியில் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது அதிமுக தான். இதுபோல் அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இன்று 21 மாத திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடுகிறது.

அவர்களுக்கு ஆதரவாக 25 அமைச்சர்கள் முகாமிட்டு, பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு அமைச்சர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் கூட, ஈரோடு கிழக்கு தொகுதி மேம்பட்ட தொகுதியாக இருந்திருக்கும். இன்று மக்களின் கோரிக்கைகளை அமைச்சர்களாக கேட்டு குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் ஏன் இவற்றை முன்னதாகவே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி 2021 தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு வெற்றிபெற்றார்கள். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் 520 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

ஆனால் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 85 சதவிகித அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 484

    0

    0