பேனாவை மட்டுமல்ல.. மண்டையையும் சேர்த்து உடைப்பேன்.. என் வீட்டுக்கு ரெய்டு வுடுங்க : சீமான் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 6:38 pm

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பேனாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படிப்பட்ட பேனா தெரியுமா என புகழ்கிறார்கள்.

நான் அதை எப்படிப்பட்ட பேனா என்பதை அடுக்கி பேசினால் வெளியில் தலைகாட்ட முடியாது. அது கொஞ்ச நஞ்ச கொடுமை செய்த பேனா இல்லை. பார்த்து பேசணும், உடைப்பியா சீமான்? என்றால் ஆமாம் உடைப்பேன்.

இதையே ஓயாமல் கேட்டால், மண்டையை உடைப்பேன், நீங்கள் அதிகாரத் திமிறில் ஆட்டத்தைப் போட்டுப் பேனாவை வைத்தால் என் அதிகாரம் எனக்கு வரும். அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது. பெயர்த்து எறிந்து விடுவேன்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2026 சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் நிற்கும்.

பிபிசி ஆவணப்படம் எடுத்தற்காக அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துகிறார்கள். பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார். நானும் தான் பேசுகிறேன். எங்கே எனக்கு ஒரு ரெய்டு விடுங்களேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இடைத்தேர்தலில் ஜெயித்து காட்ட வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வந்தவரை வசூலித்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்கும் உங்களுக்கு எதற்கு இலவசம்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 428

    0

    0