அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான அறிவிப்பு : விருப்பமனு தேதி வெளியிட்டார் இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 1:23 pm

அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான அறிவிப்பு : விருப்பமனு தேதி வெளியிட்டார் இபிஎஸ்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதி (புதன் கிழமை) முதல் மார்ச் மாதம் 1-ஆம் தேதி வெள்ளிக் கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று கொண்டு, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!