அதிமுகவுக்கு இருக்கும் தைரியம் திமுகவுக்கு இருக்கா..? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பிறகு, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக கருத்து கூறினார். அவர் கூறியதாவது ;- அதிமுக, பாஜக கூட்டணி முறிவு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போதே வாழ்த்தினேன். எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. மொழி, வழிபாடு உரிமைகளை தேசிய கட்சிகள் எப்போதும் வராது.
பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அதிகாரத்தில் இருந்ததால் தடுமாறியிருக்கலாம். இப்போதாவது இந்த முடிவு எடுத்ததற்கு பாராட்டுகள்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக இருக்கும் என நம்புகிறேன். சீமானுக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என கூறிய திமுக இனி எவ்வாறு தேர்தலின் போது வாக்கு கேட்கும்? அதிமுகவின் வலிமையை பயன்படுத்திதான் பாஜக வெல்ல முடியும். அவ்வாறு இருக்கும் போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருத்தப்படும் விதமாக அண்ணாமலை பேசியது ஏற்புடையது அல்ல.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதைப் போல, தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என சொல்லும் தைரியம் திமுகவுக்கு இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பினார் .
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.