வளர்ச்சியை பொறுக்க முடியாததால் கொலைவெறி தாக்குதல் ; எதிர்வினை ரொம்ப மோசமாக இருக்கும் ; தமிழக அரசுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை…!!

Author: Babu Lakshmanan
18 January 2024, 6:47 pm

சென்னை ; அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாம் தமிழர் கட்சியினர் மீது வன்முறையை ஏவிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 97வது மாநகராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி பிரதீப் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாது, கொடுந்தாக்குதல்கள் மூலம் முடக்க நினையும் வன்முறையாளர்களின் இக்கொலைவெறிச் செயல்களை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது.

ஆகவே, இவ்விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை ஏவிய சமூக விரோதிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும், கோவையில் தொடர்ந்து வரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், நாம் தமிழர் கட்சி உரிய எதிர்வினையாற்றுமெனவும் தமிழக அரசை எச்சரிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 342

    1

    0