குடிச்சு செத்தவனுக்கு குடிக்காதவன் கட்டிய வரிப்பணத்தை கொடுக்க நீங்க யார்..? கள்ளச்சாராய விவகாரம்.. தமிழக அரசு மீது கொந்தளித்த சீமான்..!!
Author: Babu Lakshmanan19 May 2023, 1:19 pm
தூத்துக்குடி : அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இனி வளர முடியாது என்றும், தமிழ் ஈழ பரம்பரை வளர்ந்து கொண்டே இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கட்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் இந்து கோவில்கள்களை இடித்துவிட்டு புத்தர் கோவில் கட்டப்படுகிறது. திபெத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளீர்கள். எங்களுக்கு ஏன் குடியுரிமை தர மறுக்கிறாய். இனத்தின் விடுதலை ஒன்று தான் எங்களின் இலக்கு.
விஷ சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குடிச்சு செத்தவனுக்கு குடிக்காதவன் கட்டிய வரிப்பணத்தை கொடுப்பதற்கு நீங்கள் யார்? மக்களின் நலம் சார்ந்து தான் நாம் தமிழர் கட்சியினர் இருக்கின்றனர். தமிழர்களுக்கு நல்லது கெட்டது எது நடக்கவேண்டும் ஆனாலும், தமிழகத்தில் தான் தொடங்கும். கண்முன்னே நமது வளங்கள் திருடுபோகிறது. அதை நாம் தடுக்க முடியவில்லை. எந்த அதிகாரத்தாலும் மீட்க முடியாதது வளக்கொள்ளை.
எந்த நாட்டிலும் குருதியை கொடையாக கொடுப்பவர்கள் தமிழர்கள் தான். அதிமுக, திமுக பெரிய கட்சி அதையெல்லாம் வீழ்த்த முடியுமா? அதிமுக, திமுக இனி வளராது. தமிழ் ஈழம் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி . நீட் தேர்வு கொண்டு வந்து காங்கிரஸ் தான். திமுக ஆதரவு அளித்தது. இவர்கள் வளர்க்கின்றனர்.
பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் பேனா விற்கும், சமாதிக்கும் எங்கிருந்து நிதி வருகிறது. பாஜக விற்க்கு திடீரென ஈழ தமிழர்கள் மீது பாசம் வருகிறது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். அவர்களை இலங்கை தொடாது. இலங்கைக்கு தமிழன் என்ற இனம் தான் பிரச்சினை. ஜீன் 13ல் கன்னியாகுமரியில் இருந்து என்னுடைய பயணம் தொடங்கி ஆகஸ்ட்க்குள் முடிவடையும். ஜனவரியில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குவோம், என்றார்.