அரசு திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயர்… டாஸ்மாக்குக்கு வைப்பாரா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 6:51 pm

அடுத்தமுறை பாரத பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியதாவது:- தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து NLC நிலம் கையகப்படுத்துகிறது. விவசாயிகளை இந்த மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள், NLC அமைக்கிறார்கள். இது நல்லதா, விவசாயங்களை அழிப்பது ஏற்பது அல்ல.

அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார். அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுகிறார். திமுகவினர் ஊழல் பட்டியல் வெளியிடும் அண்ணாமலை, அதிமுகவினர்கள் செய்த ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. அதிமுகவினர்கள் புனிதர்களா?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை. அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும். அங்கே மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யாரு..?. மணிப்பூர் கலவரம் பற்றி திமுகவினர் பேசுவது புனிதமா..? குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர். இப்போ எதிராக பேசுகின்றனர்.

தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கின்றார் ஸ்டாலின். டாஸ்மாக் கடைக்கு ஏன் கருணாநிதி டாஸ்மாக் கடை என பெயர் வைக்கவில்லை, எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, தமிழக மீன்வர்கள் கைது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளாரே என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் ஒரு போஸ்ட்மேன் தான். காங்கிரஸ் திமுகவினர் கூட்டும், அதிமுகவும் – பாஜகவும் கூட்டும், ஒட்டு அரசியலுக்காக… தமிழகத்தில் பல திட்டங்களை தருவதாக தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் முன்னாள் ips அதிகாரி பயிற்சியின் போது நடைபயற்சி போகிருப்பார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம் உடல் FIT ஆக இல்லை போல, தற்போது உடலை FIT ஆக நினைத்து நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை. இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராது.
தண்ணீரில் தான் தாமரை மலரும் தமிழகத்தில் தாமரை மலராது.

தேர்தலுக்காக 70 ஆயிரம் பணி நியமன ஆணை என்ன..? இன்னும் பாருங்க என்ன வாக்குறுதி எல்லாம் மோடி தருவார் என்று. சொல்லி வாக்கை பெற்று தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் பிரதமர் மோடி. சந்திரயான் பற்றி மோடி பாராட்டி பேசி வருகின்றார். அங்கே குடிபோக நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா..?, முஸ்லிம்களையா..? கிறிஸ்தவர்களையா என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும், என்றார்.

பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது. காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்து என்ன தமிழகத்திற்கு செய்தது. தமிழகத்தையும், தமிழக மக்களையும் ஏமாற்றி, தமிழகத்தை தனியார் துறைக்கு தாரை வார்த்து வஞ்சிக்க உள்ளது .
அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும், என்று சீமான் பேசினார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!