எல்லாத்துக்கும் நானே பொறுப்பு… என்னிடம் தான் அவர்கள் விசாரிக்கனும்… 5ம் தேதி நானே நேரில் போறேன்… என்ஐஏ ரெய்டு குறித்து சீமான் விளக்கம்…!!!

Author: Babu Lakshmanan
2 February 2024, 4:29 pm

அனைத்திற்கும் பொறுப்பு நான்தான் என்றும், என்னிடம் விசாரணை மேற்கொள்ளுங்கள்‌ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை எதிர்த்து அக்கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த என்ஐஏ சோதனை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :- விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் பணம் அளிப்பதாக கூறுகிறார்கள். விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக நீங்கள் தான் கூறுகிறார்கள். என்ஐஏ என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அவர்களிடம் கேட்டால் எப்படி….? அனைத்திற்கும் பொறுப்பு நான்தான். 5ம் தேதி நானே செல்கிறேன். என்னிடம் விசாரணை மேற்கொள்ளுங்கள்‌. சட்டத்திற்கு எதிராக நாங்கள் ஈடுபட்டால் நடவடிக்கை எடுங்கள். இந்த என்‌.ஐ‌.ஏ விசாரணை எதிர்பார்த்த ஒன்று தான். ப்ரோ கபடியில் மோசமாக விளையாடுவது தமிழ் தலைவாஸ் தான்.

டாஸ்மாக் நிறுவனத்தை அரசு நடத்தும் போது, ஏன் தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் நடத்தி தரமான திரைப்படத்தை ஏன் அரசு தயாரிக்க கூடாது. நான் வரமாட்டேன் என்று தெரிந்துதான் என்னை கூட்டணிக்கு அழைக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணிக்கு வந்தால் அதிகபட்சம் காசு தான் கொடுப்பார்கள். ஒன்றிரண்டு சீட்களை வைத்து நாம் என்ன செய்ய முடியும். மேசையை தான் தட்ட முடியும்‌.

நாடாளுமன்ற தேர்தலுக்கு விஜய் வரமாட்டார்‌‌. அவர் வந்தாலும் பலனளிக்காது. விஜய் எந்த கோட்பாட்டோடு அரசியலுக்கு வருகிறார் என்பது தெரியாது. தொடங்குதல் எளிது. தொடர்வது கடினம். இதுதான் விஜய்க்கு நான் சொல்லும் அறிவுரை. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். அதை விஜய் செய்வார் என்று நான் நம்புகிறேன், எனக் கூறியுள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!