‘அப்படி சொன்னால், மணிவண்ணனின் செருப்பு என்கிட்ட இருக்கு.. பிச்சிடுவேன்’ ; எச்சரிக்கும் சீமான்..!!
Author: Babu Lakshmanan15 October 2022, 9:31 am
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது;- சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழரின் கோரிக்கை.
சமூகநீதி பேசுகிற, பெரியார் மண் என பேசும் இவர் எடுக்க மறுப்பது ஏன்? பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நித்தீஷ்குமார் எடுக்கிறார். எது உண்மையான சமூக நீதி? நீத்திஷ் குமார் எடுக்கிறார், நீங்கள் ஏன் எடுக்க தயங்குவது. எங்களை வஞ்சித்தது தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக எடுக்க மறுக்கின்றனர்.
தேவேந்திர எவ்வளவு என எண்ணிக்கை நடத்தி பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது. அதாலேயே பிச்செரிந்துவிடுவேன். ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என அண்ணாமலை சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளா மோடி என்ன செய்தார்.
ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ராஜராஜசோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துவும் இல்லை வரலாற்றை படிக்க வேண்டும். அவர் கட்டிய கோயில் சைவக் கோயில் என வரலாற்று குறிப்பில் அவர் சைவ மரபினர் என்று தான் உள்ளது. எனவே, நாங்கள் வீர சைவர்கள் தான். எங்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்காதீர்கள், வள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.
குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள். இல்லையென்றால் சமூக நீதி பற்றி பேசுவதை விடுங்கள். யாரையும் ஏமாற்ற மாட்டோம் யாரிடமும் ஏமாற மாட்டோம். பீகார் எந்த வழியை பின்பற்றியதோ அதே போல் இங்கும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.
இசைஞானி இளையராஜா, ஈடு இணையற்ற சாதனை புரிந்த இளையராஜாவுக்கு தலித் அடிப்படை எம்.பி பதவி கொடுக்கப்பட்டதாக செல்கின்றனர். அதை இளையராஜா நிராகரித்து இருக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.