மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 11:06 am

மதுரை முத்து போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிராப்பர்ட்டி காமெடி செய்து வருகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்தள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: Gold and Silver rate ; கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சட்டென குறைவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

அப்போது, அவர் பேசியதாவது :- என் வேட்பாளராக நிறுத்தி இருக்கிற பெருந்தகை மருத்துவர் ஐயா கையிலை.ராஜன் அவர்கள். என்னோடு நிற்பவர்கள் எல்லாம் எனக்கு இணையாக அவர்கள் என்னிலும் இளையவர்கள். ஆனால். ஐயா கையிலை ராஜன் அவர்கள் மருத்துவர். அவர் மனைவி மருத்துவர். அவர் மகனும் மருத்துவர்.

அழகாக மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு வீட்டிலே நிம்மதியாக இருக்கலாம். ஆனால் எல்லாத்தையும் விட்டுவிட்டு நீண்ட நாட்கள் தேக நலனுக்கு மருத்துவம் செய்தாகி விட்டது. இனி இருக்கிற காலங்களை தேசத்திற்காக மருத்துவம் செய்வோம் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு, எங்களோடு இணைந்து இந்த வெயிலிலே அவர் வாக்கு கேட்டு வருகிறார் என்றால், இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர் வைத்திருக்கின்ற பற்றை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

எங்கள் இடத்திலே உயர்ந்த நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்ற உழைப்பு தவிர வேறு எதுவும் இல்லை. நாங்களே பேசித்தான் ஆக வேண்டும். என்னை பார்க்கிறவர்களெல்லாம் காலையிலிருந்து வெயிலில் இப்படியே அலைந்து அலைந்து பேசி திரிகிறாயே, இன்னும் எவ்வளவு நாளைக்கு பேசுவது உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

மற்றவர்களுக்கு பேசுவதற்கு தொலைக்காட்சி இருக்கிறது. எங்களுக்கு நாங்களே தான் பேசியாக வேண்டும். ஏனென்றால் இதில் எளிய மக்கள் முன்னெடுக்கிற மாற்றத்திற்கான புரட்சி. இவ்வளவு தடை அடக்குமுறை இடையூறு எல்லாவற்றையும் தாண்டி, நாங்கள் நிற்பது எங்கள் மக்களை நம்பி. எது எவ்வளவு இடைவெளி வந்தாலும் யாரும் நெருங்க முடியாத கோட்டையாக நின்று மானத் தமிழ் மறவர்கள் என் இன சொந்தங்கள்.

மேலும் படிக்க: பிஞ்சு போன செருப்பா..? வேணாம், எங்களுக்கும் பேச தெரியும்..? அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை..!!!

எங்கள் கோட்டையை என்று காப்பார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை யார் யாருக்கோ ஓட்டு போட்டு ஏமாந்து போன என் சொந்தங்கள், சொந்த பிள்ளைகளுக்கு நம்பிக்கையோடு வாக்கு தருவார்கள் என்ற உறுதியில் தான் இந்த களத்தில் உங்கள் பிள்ளைகள் வந்து நிற்கிறோம்.

காட்சிகளை நீங்கள் கவனத்தில் எடுத்துப் பாருங்கள். எங்களையும் தவிர எல்லோருமே கூட்டணி தான். திமுக, அதிமுக பெரிய கட்சி என்கிறார்கள். நாட்டையே ஆண்டு விட்டோம் என்கிறார்கள் பாரதிய ஜனதா. ஆனால் தனித்து நிற்க பயப்படுவதேன்? நீங்கள் செய்த ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கலாமே. பத்தாண்டு காலம் அய்யா மோடி அவர்கள் செய்த ஆட்சியின் சாதனை, காங்கிரஸ் அதற்கு முன்பு பத்தாண்டு காலம் செய்த ஆட்சியின் சாதனை, ஐயா மன்மோகன் சிங் ஆட்சியிலே நாங்கள் இதெல்லாம் செய்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இவ்வளவு பண்ணியிருக்கிறோம் என்று.

காவிரியில் ஒரு சொட்டு தண்ணி வாங்கி தர துப்பற்ற, வக்கற்ற உங்களுக்கு எதுக்குடா மானத் தமிழ் மக்களின் ஓட்டு என்று கேட்கிற துணிவும், தெளிவும், தகுதியும் ,நேர்வழியில் செல்கிற எங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. மதுரை முத்து போன்று பிராப்பர்ட்டி காமெடி செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எனக் கூறினார்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!