ஒரே நாளில் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: kavin kumar
27 January 2022, 9:02 pm

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 32,52,751 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழப்பின் எண்ணிக்கை 37,412-ஆக உள்ளது.

இதுபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 28,620 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 30,01,805 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,13,534 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவையில் 3,629 பேருக்கும், செங்கல்பட்டில் 1,696 பேருக்கும், திருப்பூரில் 1,877 பேருக்கும், சேலத்தில் 1,431 பேருக்கும், ஈரோட்டில் 1,314 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • bismi said that good bad ugly movie genre is dark comedy குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..