பாஜகவை வளர்ப்பது என்னோட வேலை கிடையாது… அண்ணாமலைக்கு கனிமொழி கொடுத்த பதிலடி..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 11:45 am
Kanimozhi
Quick Share

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெற்றார்.

பாஜக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தோற்றுவிட்டார். இதையடுத்து கனிமொழி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.

அதற்கு பதிலடியாக, கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கனிமொழி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும். அவர்கள் கட்சியை வளர்க்க நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. பனியன் கம்பெனி டெய்லருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு!

திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு தெரிந்த இயக்கம். என்னை இங்கிருந்து யாரும் எதுக்காகவும் அசைக்க முடியாது. அதைத்தாண்டி அவர்கள் கட்சியை வளர்ப்பது என்னுடைய வேலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Views: - 115

0

0