தேனியில் நடந்த போராட்டத்தின் போது மேடையில் டிடிவி தினகரனின் காலில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கலந்து கொண்டனர்.
அப்போது, மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :- கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும், என தெரிவித்தார்.
முன்னதாக, போராட்டம் தொடங்கிய போது, மேடைக்கு வந்த டிடிவி தினகரனை வரவேற்று தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருக்கும் போது, மேடையில் டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா திடீரென டிடிவி தினகரன் காலில் விழுந்தார். இதனால், பதறிப் போன டிடிவி தினகரன் அவரை தடுத்தார்.
இந்த காட்சிகளை அருகில் நின்று கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது சசிகலாவை ஓ.ராஜா சந்தித்து பேசினார். இதன் காரணமாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தால் நீக்கப்பட்டார். தற்போது டிடிவி தினகரன் -ஓபிஎஸ் இணைந்த நிலையில் ஓ.ராஜாவும் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
This website uses cookies.