பழைய ஓய்வூதிய திட்டம் எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான்.. அரசு ஊழியர்களுக்கு திமுக கல்தா : ஓபிஎஸ் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 4:36 pm

மதுரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக, புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், சட்டப்பேரவை நிறைவடைந்து தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் என நிதியமைச்சர் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்ததாவது :- தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக்கொண்டுள்ளனர். பழைய ஒய்வூதிய திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும், எனக் கூறினார்.

CM Stalin - Updatenews360

தொடர்ந்து, மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்கு, “ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது,” எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1184

    1

    0