ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.1000 பணம்… சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்… தேர்தல் அதிகாரிக்கு பறந்த புகார்..!!
Author: Babu Lakshmanan30 March 2024, 4:11 pm
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்ததாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நாடாளுன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவரை எதிர்த்து இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் எனும் பெயரில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியுள்ள நடந்த பாஜக கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்துள்ளார்.
அப்போது, சில பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, அவர்களுக்கு ஓபிஎஸ் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1000 எடுத்து கொடுத்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விதமாக இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.