நள்ளிரவில் திடீரென பிரிந்த உயிர்.. உடனே ஓடிவந்த ஓபிஎஸ்… தாயின் காலை பிடித்து கதறி அழுத சோகம்!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 8:56 am

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95). வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனியம்மாளுக்கு திடீரெனெ உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பானக ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்த்தார். பின்னர், தாயாரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அரசியல் பணிகளுக்காக அவர் சென்னை வந்தார்.

இந்த நிலையில், பழனியம்மாளின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவும், முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது. தாயாரின் மறைவு செய்து கேட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், தாயாரின் மறைவு தாங்காமல் அவரின் கால்களை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பழனியம்மாளின் இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று நடக்கிறது.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 441

    0

    0