அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி… மருத்துவமனையில் ஓபிஎஸ் : தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 1:23 pm

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ஓபிஎஸ்-க்கு வந்த மற்றொரு அதிர்ச்சி தகவலால் அவர் உடனே மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியானது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் உள்பட நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஆட்டம், பாட்டத்துடன் காணப்படும் அவர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியடங்குவதற்குள் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(90). வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனியம்மாளுக்கு திடீரெனெ உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓபிஎஸ் உடனடியாக போடியில் இருந்து தேனி வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ள தாயாரை நேரில் சென்று பார்த்து மருத்துவரிடம் தயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தயாரின் உடலை செய்தி அவருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1377

    0

    0