ஆடு, மாடுகளைப் போல மக்களை வாகனத்தில் அழைத்து வந்த ஓபிஎஸ் அணியினர்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
1 August 2023, 12:56 pm

தேனியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் போராட்டத்திற்காக பொதுமக்களை, ஆடு, மாடுகளைப் போல வாகனத்தில் அடைத்து வைத்து அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் நடத்திய சட்டப்போராட்டமும் எதிராகவே முடிந்தது. இருப்பினும், அதிமுகவை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயலாற்றி வருகிறது.

இதனிடையே, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி தேனியில் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தார். இந்த போராட்டத்தில் அமமுகவும் பங்கு பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அறிவித்திருந்தார்.

இப்படியிருக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் இனி அனைத்து நிகழ்வுகளிலும் கைகோர்த்து செயல்படப் போவதாக டிடிவி தினகரன் கூறினார்.

இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை முறையாக விரைந்து விசாரிக்காத தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர்.

வடசென்னை பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் “குட்டி யானை” வாகனத்தில் ஆடு மாடுகளை அழைத்து வருவதை போல அழைத்துவரப்பட்ட காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது. 15 இருந்து 20 பேர் வரை பயணம் செய்யக்கூடிய வாகனத்தில், 40 பேரை நெருக்கி நிற்க வைத்து அழைத்து வந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டால் பணம் கொடுப்பார்கள் என்பதால் வயது முதிர்ந்த பெண்களும் அவ்வளவு நெருக்கடியிலும் அந்த வாகனத்தில் பயணம் செய்து வருவதாகவும், இதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1133

    0

    0