டெல்லியில் இபிஎஸ்-க்கு முதல் மரியாதை… பாஜகவின் திடீர் முடிவால் உச்சகட்ட விரக்தி… ஓபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 6:24 pm

தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மணிப்பூர் கலவரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதில் கூறியதாவது :- நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் ஏற்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு பேர் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளது நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் கடமை, இந்திய அரசின் கடமை, எனக் கூறினார்.

தொடர்ந்து, ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் உளறியது குறித்த கேள்விக்கு, ‘திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க’ என்றார்.

தேர்தல் ஆணையம் உங்களை இன்னும் ஒருங்கிணைப்பாளராக வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, “உங்களுக்கு புரிந்திருக்கிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லை,” எனக் கூறினார்.

தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம். அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு. தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும், எனக் கூறினார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 310

    0

    0