அதிமுக பிரமுகர் விந்தியா குறித்து ஆபாச பேச்சு : திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனுக்கு சிக்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2023, 11:55 am
அதிமுக பிரமுகர் விந்தியா குறித்து ஆபாச பேச்சு : திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனுக்கு சிக்கல்!!
திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக நிர்வாகியும் நடிகையுமான விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனலில் தன்னை ஆபாசமாக பேசியதாக நடிகை விந்தியா புகார் அளித்திருந்தார்.