MGR-ஐ தொட்டு பார்க்கனும்-னு ஆசை… அடுத்த MGR-ஐ தொட்டு பார்த்துட்டேன் ; அண்ணாமலையை கட்டிப்பிடித்து பாசமழை பொழிந்த மூதாட்டி…!!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 11:54 am

எம்ஜிஆரை தொட்டு பார்த்து பேசணும்னு நினைச்சேன்,அடுத்த எம்ஜிஆர் தொட்டு பார்த்து பேசிட்டேன், இது போதும்பா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டிப்பிடித்து பாசமழை பொழிந்த மூதாட்டியில் செயல் வைரலாகி வருகிறது.

என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொணடு வரும் நிலையில் நேற்று 8வது நாளாக மதுரை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மாலை சோழவந்தான் தொகுதியில் நாராயணபுரத்தில் நடைபயணம் துவங்கியது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

நாராயணபுரத்தில் ஆரம்பித்த நடைபயணத்தின் போது, அதே பகுதியை சேர்ந்த 67 வயது நிறைவடைந்த மூதாட்டி பார்வதி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கட்டிப்பிடித்து அமர வைத்து இளநீர் கொடுத்தார். அதோடு, “மூதாட்டி நான் எம்ஜிஆரை தொட்டு பார்த்து பேசணும் நினைத்தேன். அது முடியல. அடுத்த எம்ஜிஆரை தொட்டு, பார்த்து பேசிட்டேன். இது போதும்பா, என்ற பெருமிதத்துடன் கூறினார்.

அதை தொடர்ந்து, நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை ஊத்துக்குளி அருகே வாழை விவசாயம் செய்து வந்த அர்ஜுனன் என்ற விவசாயிடம் சென்று, பிரதமர் மோடி விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்ற புத்தகத்தை காட்டி மத்திய அரசு விவசாயிகளுக்கு திட்டங்களை விளக்கி கூறினார்.

இதை தொடர்ந்து, அங்கு பிரச்சார வாகனத்தில் ஏறி திரண்டு இருந்த பொதுமக்களிடையே மத்திய அரசு 9 ஆண்டு காலம் மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 547

    0

    0