சென்னை : பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விமான டிக்கெட்டுக்கு இணையாக உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரம் ஆயுத பூஜை உள்பட பல்வேறு பண்டிகைகள் வருவதால் தொடர் அரசு விடுமுறை வருகிறது. எனவே, வெளியூரில் படிப்பு மற்றும் வேலை செய்பவர்கள் எல்லாம், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் தங்களின் கட்டணங்களை மளமளவென உயர்த்திவிட்டன. இது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டண பட்டியலை பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்தில் இருக்கைக்கு ரூ.2,327, படுக்கைக்கு ரூ.2,820 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டணப் பட்டியலை வெளியிட்டது தனியார் ஆம்னி பேருந்துகள் சங்கம்
இடம் – விலை நிர்ணயம்
சென்னை – கோவை ; ரூ.1,815 முதல் ரூ.3,025 வரை
சென்னை – மதுரை ; ரூ.1,776 முதல் ரூ.2,688 வரை
சென்னை – பழனி : ரூ.1,650 முதல் ரூ.2,750 வரை
சென்னை – சேலம் ; ரூ.1,435 முதல் ரூ.2,109 வரை
சென்னை – தென்காசி ; ரூ.2,079 முதல் ரூ.3,465 வரை
சென்னை – நெல்லை ; ரூ.2,063 முதல் ரூ.3,437 வரை
விழாக் காலங்களில், ஆம்னி பேருந்துகளில் வரன்முறையின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 27ம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஓரிரு நாளில் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பார்கள். அதைவிட அதிகம் வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும், எனக் கூறினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.