ஜூன் 4ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்… கருணாநிதி நினைவிடத்தில் சமர்பிப்போம் : CM ஸ்டாலின் மடல்!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2024, 5:25 pm
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ‘2023 ஜூன் 3ம் நாள் தொடங்கிய கலைஞரின் நூற்றாண்டு, 2024 ஜூன் 3 அன்று நிறைவடைகிறது.
கடந்த ஓராண்டு முழுவதும் சாதனை திட்டங்களாலும் மக்களுக்கு பயனளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டை கொண்டாடி இருக்கிறோம். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாக கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.
மேலும் படிக்க: பப்புவா நியூ கினியா நாட்டில் கடும் நிலச்சரிவு : கொத்து கொத்தாக சிக்கி உயிரிழந்த மக்கள்!
திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாக திருவாரூர் கலைஞர் கூட்டம் அமைந்துள்ளது. ஜூன் 3 அன்று கலைஞர் பிறந்த நாளை தேர்தல் நடத்தி முறைகளை கவனத்தில் கொண்டு மக்கள் நலம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்ட கழகம் சார்பிலும், ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு அனைத்து கொடிக்கம்பங்களிலும் கொடிகளை புதுப்பித்து கொடியேற்ற வேண்டும். இனிப்புகள் வழங்கி மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100′ என்ற வரியுடன் கோலமிட்டு கலைஞரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.’
தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திமுகவின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உள்ளுர உணர்ந்து அவர்கள் புலம்புவதை காணமுடிகிறது.
ஜூன்-4 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றி கொடி ஏற்றுவோம். இந்தியாவின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாகவும். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர் நிகர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.
ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
..