திமுகவுக்கு துண்டு போட்டாச்சா? கருணாநிதியின் நினைவு நாளில் எஸ்.வி. சேகர் திடீர் ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 10:37 am

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் கருணாநிதியின் நினைவலைகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில், மாறுபட்ட கொள்கை உடையவனாக நான் இருந்தாலும் கடைசிவரை தனிப்பட்ட முறையில் என் மேல் அன்பு செலுத்திய “கலைஞர்” நான் மறக்க முடியாதவர். பஞ்சாயத்து, மாநில, மத்திய அரசு என ஆளுமை செய்தவர். அவர் நினைவுகளுடன் இந்த வீடியோ போட்டவுடன் திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா? போன்ற அல்ப கேள்விகளுக்கு என்னை நன்கு தெரிந்தவர்களிடம் என்னைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என் அரசியல் God Father SRI. MODIJI. MY RAJAGURU IS SRI CHO. THIS IS MY POLITICAL STAND என பதிவிட்டுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!