சென்னை ; ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வப் பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கூறினார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் எந்த விதமான விளக்கமும் இதுவரை கேட்கப்படாத நிலையில், சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கையாக ஆளுநரை சந்திக்க இன்று அல்லது நாளை நேரம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
10% இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் இதர கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்த அவர், வழக்கு விசாரணையின் போது தேவையான வாதங்களை அரசு முன்வைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரகுபதி, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த தேவையான வாதங்களை வழக்கு விசாரணையின் போது அரசு முன்வைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.