ஆன்லைன் ரம்மி விவகாரம்.. ஆளுநர் மீது பழியை போட்ட திமுக… ஒப்புக்கொண்ட அமைச்சர் ரகுபதி ; அம்பலப்படுத்திய அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 1:48 pm

சென்னை ; ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில் பாஜக கூறியதைப் போல, திமுக முறையாக கையாளவில்லை என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக் கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் பணத்தை இழந்ததால், தமிழகத்தில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர். இளைஞர் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாவதை தடுக்கவும், சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அந்த தடையை நீதிமன்றம் நீக்கியது.

இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், சூதாட்டங்களினால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா இயற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் இதுவரையில் ஒப்புதல் அளிக்காததால், அந்த மசோதா காலாவதியானது. இதனால், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சித்தன. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து அரசாணையை தமிழக அரசு வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்த சூழலில், ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் தடை மசோதா குறித்து அரசிதழில் பதிவிட்டு விட்டதாகவும், ஆனால் அரசாணை வெளியிடவில்லை என்று கூறியது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற இருந்ததால், அரசாணை வெளியிடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில தமிழக அரசு முறையாக கையாளவில்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டு நிரூபணமாகிவிட்டதாக, அமைச்ச் ரகுபதி பேசும் வீடியோ பகிர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது ;- இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும், என கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 512

    0

    0