6 மாதமாக ஆன்லைன் ரம்மியில் ஆர்வம்… பணத்தை இழந்ததால் விரக்தி.. இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 12:58 pm
Quick Share

மதுரை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் விரக்தியில் தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த ஆன்லைன் ரம்மியின் கோரபிடியில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

இதனை தடுக்க ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன்பேரில், தமிழக அரசும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் முல்லக்காடு பகுதியை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார். இந்த நிலையில், அதிக பணம் இழந்ததால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 365

    0

    0