மறுபடியும் முதல்ல இருந்தா? ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா.. நாளை பேரவையில் மீண்டும் தாக்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2023, 8:39 pm
தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைன் தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
நீதியரசர் சந்துரு குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையிலேயே மீண்டும் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தடைச் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அதற்கு அரசு அளித்த விளக்கங்களை பேரவையில் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.