சென்னை : 23 பேர் உயிரிழக்கக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு யோசிப்பது ஏன்..? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தத் தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்த காவலர் உள்பட பல ஆண்களும், பெண்களும் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் ஒரு பகுதியாக, பாமக சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதனிடையே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், 23 பேர் உயிரிழக்கக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு யோசிப்பது ஏன்..? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன, இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23பேர் உயிரிழந்துள்ளனர், ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்கு காரணிகள் தேவை?
ஆய்வு குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது, இந்த விடியா அரசு குழு அமைப்பதிலேயே முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு , நிரந்தர தீர்வுகாக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி,
இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.