இன்னும் 2 தொகுதிகள்தான்… எனக்கு நம்பிக்கை இருக்கு : திடீரென உருக்கமாக பேசிய அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 7:29 pm

இன்னும் 2 தொகுதிகள்தான்… எனக்கு நம்பிக்கை இருக்கு : திடீரென உருக்கமாக பேசிய அண்ணாமலை!

அண்ணாமலை ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நம்முடைய ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை இன்றோடு 232 தொகுதிகளை கடந்திருக்கிறது.

சற்று நேரத்துக்கு முன்பு, 232-வது தொகுதியாக மதுராங்கத்தை கடந்துவிட்டு, நாளை மறுதினம் (மார்ச் 27) 233-வது தொகுதியாக திருப்பூரிலும், பிறகு 234-வது தொகுதியாக பல்லடத்திலும் இந்த யாத்திரையை நடத்தவுள்ளோம்.

இந்தக் கடுமையான பயணத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மோடு சகோதர சகோதரிகள், மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும்திரளாக வந்து எங்களுக்கு ஊக்கத்தை கொடுத்திருக்கீங்க. ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

தமிழக அரசியலில் இத்தனை ஆண்டுகாலமாக நாம் எதிர்பார்த்த மாற்றம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் நடைபெறப் போகிறது. ஒருபக்கம், மோடி ஐயாவின் அற்புறதமான ஆட்சி. மறுபக்கம், தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு. இன்னொரு பக்கம், நேர்மையான அரசியலுக்கான தமிழக மக்களின் ஏக்கம். இந்த மூன்றும் சேர்ந்து 2024-இல் நமக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும். என்னுடன் இந்த பாதயாத்திரையில் ஆரம்பம் முதல் கடைசி வரை பயணம் செய்தவர்கள்,

யாத்திரையில் கலந்துகொண்டவர்கள், யாத்திரைக்கு உதவியவர்கள், யாத்திரையில் கலந்துகொள்ள தவறியவர்கள் என உங்கள் அனைவரையும் உங்கள் அன்பு தம்பியாக பல்லடத்தில் மார்ச் 27-ம் நடைபெறும் யாத்திரைக்கு வர வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன். இது என்னுடைய யாத்திரையோ, பாஜகவின் யாத்திரையோ அல்ல. இது உங்களின் யாத்திரை.

இந்த யாத்திரையில் நமது பிரதமர் நரேந்திர மோடி சரியாக 2 மணிக்கு கலந்துகொள்வார்கள். நீங்கள் நேரடியாக வந்து நமது பிரதமருக்கு உங்கள் ஆசிர்வாதத்தை கொடுங்க. அன்பை கொடுங்க. எங்களுடன் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று உரக்க சொல்லுங்கள். நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…