இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் வெற்றி வாய்ப்பு : தினேஷ் குண்டுராவ் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 2:48 pm

ஈரோடு கிழக்கு பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட காங். தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

நேர்காணலை தொடர்ந்து தினேஷ் குண்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட முன்னாள் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், ஆரணிய எம்.பி. விஷ்ணு பிரசாத், வேளச்சேரி எம்.எல்.ஏ அசல் மவுலான உள்ளிட்டோரோடு ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பேசியது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. இதற்கான பட்டியலை காங்கிரஸ் மேலிடத்திற்கு ஓரிரு நாட்களில் அனுப்படும்.

இறுதி வேட்பாளை தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும். ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம், எதிர்கட்சி பல்வேறு பிரிவாக செயல்படுகிறது, குழப்பத்தில் உள்ள அவர்கள் யார் போட்டியிடுவது குறித்து பொறுத்து இருந்து பார்ரப்போம் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பதால் தேசிய தலைவர்கள் வர வாய்ப்பில்லை, மாநில தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்வோம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ