இந்த நாட்டைக் காக்க, பாஜகவை எதிர்த்து போராட இவரால் மட்டுமே முடியும் : கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2022, 8:47 pm

டெல்லி சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அக்கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘இந்த நாட்டைக் காக்க,எவ்வித சமரசமும் இல்லாமல்,ஆர்எஸ் எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட தலைவர் ராகுல்காந்தியால் மட்டுமே முடியும். இந்த தேசத்தின் ஆன்மாவை அதற்குரிய அத்தனை மகத்துவத்தோடும் புரிந்துகொண்டுள்ள தலைவர் அவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் உடனே பொறுப்பேற்க வேண்டும்.

எவ்வளவு தோல்விகள் வந்தாலும், துணிச்சலோடு களத்தில் நின்று,போராடி வெல்பவரே உண்மையான தலைவர்.அப்படிப்பட்ட கொள்கை உறுதியும்,மக்கள் மீது மாறாத அன்பும், துணிச்சலும் மிகுந்த தலைவர் ராகுல்காந்தி.அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவது உறுதி.’ என பதிவிட்டுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்