ஒரே ஒரு வீடியோ… கோவை பாஜக நிர்வாகிக்கு ஷாக் : அண்ணாமலை போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
14 செப்டம்பர் 2024, 7:39 மணி
Cbe Bjp
Quick Share

கோவையில் ஜிஎஸ்டி குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் யதார்த்தாமாக கொங்கு தமிழில் சில கேள்விகளை கேட்டிருந்தார்.

இதையடுத்து அடுத்த நாளே அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. அதாவது அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், அன்னபூர்ணா சீனிவாசன் ஆகிய மூவர் இருந்த நிலையில் சீனிவாசன் எழுந்து நின்று கை கூப்பி மன்னிப்பு கேட்ட வீடியோவை யாரோ வேண்டுமென்றே வெளியிட்டு அவரை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து வானதி கூறிய போது அவர் மன்னிப்பு கேட்ட போது பாஜகவினரும் ஹோட்டல் தரப்பினரும் இருந்தார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்றார். வயதில் மூத்தவர், கோவையில் முன்னணி தொழிலதிபர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து போட்டது பாஜகவினரே அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், அன்னபூர்ணா விவகாரத்தில் தவறான தகவலை பரப்பியதற்காக சதீஷ் நீக்கப்பட்டுள்ளார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 122

    0

    0