ஒரே ஒரு வீடியோ… அதிர்ந்து போன விடுதலை சிறுத்தைகள் கட்சி : நிர்வாகிகளுக்கு திருமாவளவன் போட்ட முக்கிய உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2023, 1:52 pm
ஒரே ஒரு வீடியோ… அதிர்ந்து போன விடுதலை சிறுத்தைகள் கட்சி : நிர்வாகிகளுக்கு திருமாவளவன் போட்ட முக்கிய உத்தரவு!!
விசிகவை குறிவைத்து கடந்த சில வாரங்களாக அரசியல் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். அண்மையில் சீரியல் நடிகை அகிலா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை குறித்து மோசமான அவதூறான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திருமாவளவன் மீது தனிப்பட்ட முறையில் மோசமான விமர்சனங்களை வைத்தார்கள். இது பெரும் சர்ச்சையான நிலையில், நடிகை அகிலா விளக்கம் அளித்தார்.
அகிலா கூறும் போது, “ஒரு முக்கியத் தலைவர் என்ற காரணத்தால் வெறுமனே, ‘திருமாவளவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்’ என்று சொன்னால் நன்றாக இருக்காது என குறிப்பிட்டு, ஒரு உரை தயார் செய்து பேசியதாக குறிப்பிட்ட அகிலா, தான் பேசியதை அவர் உற்று கவனித்துக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் அதை வேறு விதமாக ட்ரோல் பண்ணி, அவரை களங்கப்படுத்தும் விதமாக பரப்பினார்கள்.
ஒரு ஆணை அசிங்கப்படுத்துவதாக நினைத்து உடன் இருக்கும் பெண்ணின் மாண்புக்கும் களங்கம் விளைவிக்கிறார்கள். இப்படி செய்வதால் உங்களின் வக்கிர புத்தி இதன் மூலம் வெளிப்படுகிறது என்று கூறி, ஒருவரிடம் குறை இருந்தாலும், அவரிடம் என்ன நல்ல விசயம் இருக்கிறது என்பதை பார்த்து, குறைகளை விட்டுவிட வேண்டும் என்று கூறினார். அதன்பின்னரே அவதூறுகள் குறைந்தது.
‘இந்த பிரச்சனை ஓய்த பின்னர், அப்படியே விசிக திமுக கூட்டணிக்கு எதிராகவும் சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருக்க திருமாவளவன் விரும்பவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அண்மையில் திருமாவளவன் கூறும் போது, சென்னை மிக்ஜாம் புயல் குறித்து எதிர்க்கட்சிகளை போல் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார். இது திமுக விசிக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்று கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன. இது ஒருபுறம் எனில் விசிகவின் உட்கட்சி விவகாரங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது மேலும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
இந்த சூழலில் உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது என விசிக நிர்வாகிகளை திருமாவளவன் எச்சரித்துள்ளார். வரும் டிசம்பர் 29ம் தேதி திருச்சி சிறுகனூரில் விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்னும் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விசிகவினர் செய்து வருகின்றனர்.
மாநாடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார். இதில், துரை ரவிக்குமார் எம்பி. ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநாடு நடைபெறும் திடல் வடிவமைப்பை கொண்டு நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருமாவளவன் விவாதித்தாராம். உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது என்றும் எச்சரித்தாராம். இது இறுதி எச்சரிக்கை என்று நிர்வாகிகளிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.