தண்டவாளத்தில் விழுந்த பாறை; மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் ரத்து..!

Author: Sudha
1 August 2024, 2:19 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலையில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. அடர்லி_ஹில்குரோவ் ரயில் நிலையங்களிடையே ஏற்பட்ட மண் சரிவில் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன, மரங்கள் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று காலை வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு சென்ற மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி இயக்கி வரப்பட்டது. மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…