தமிழகத்தில் 100% மாணவர்களுடன் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் வருகை தரும் மாணவர்கள்…!!

Author: Rajesh
1 February 2022, 8:27 am

கோவையில்: தமிழகத்தில இன்று முதல் 100 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. கோவையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று முதல் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் முழுமையாக செயல்பட உள்ளன. கோவையை பொறுத்தவரை நேற்று பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .

கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளின் வளாகத்தில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், நுழைவு வாயில், கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு சனிடைசர் பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கொரோனா தொற்று விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…