அரசு பணியிடங்களை நிரப்புவதில் குளறுபடி..? வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி

Author: Babu Lakshmanan
26 December 2022, 11:15 am

திமுக  அரசு 18 மாத காலத்திலே, அரசு வேலைவாய்ப்புகளை எத்தனை பேர்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அரசு தயாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று இளைஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். குரூப் 2, குரூப் 3 அட்டவணையில் இல்லை என்ற பெரிய ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று இளைய சமுதாயம் கருத்துக்களை கூறுவது அரசின் கவனத்திற்கு வந்ததா என்று தெரியவில்லை.

திமுக தேர்தல் அறிக்கை எண் 179யில், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், திமுக தேர்தல் அறிக்கை எண் 187யில், தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தேர்தல் அறிக்கை எண்188யில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பொது சொத்துக்களை பாதுகாக்கவும் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்க படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திமுக தேர்தல் அறிக்கையின் 190யில் தமிழக முழுவதும் உள்ள திருக்கோவிலில் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் 25,000 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், திமுக தேர்தல் அறிக்கையின் 191யில், மக்கள் நலப் பணியாளராக 25,000 மகளிர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று இந்த அறிவிப்புகள் மூலம் 5.50 லட்சம் அரசு துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது தேர்தல் அறிக்கை கூறப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த திமுக முன்னேற்றக் கழக அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அரசு தயாரா?

73,99,512 நபர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிற இளைய சமுதாயத்தில் வாழ்வில் ஒளியேற்றிய நடவடிக்கையை அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளிலே ஓய்வு பெறுபவர்களின் காலி பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகளின் அனைத்தும் பட்டியல்களை கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறார். 

இந்த நடைமுறையில் உள்ள பணியிடங்களுக்கு அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்து பணி வழங்குகிறது தொழில்நுட்பங்கள் வளர வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றுங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்றைக்கு இளைய சமுதாயத்தின் உடைய வேலைவாய்ப்பு தேடல் என்பது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியோடு பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. 

கடந்து சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21, 85,328 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள், அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை தந்திருக்கிறது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப் 2, குரூப் 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும், குரூப் 4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குரூப் ஒன் தேர்வில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பர் முதல் நிலை 2024 ஜூலை முதன்மை டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை காலி இடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. அது பகல் கனவாக இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா? என்பதை எடப்பாடியார் வழிகாட்டுதலோடு கேட்டுக்கொள்கிறேன்.

எடப்பாடியார் இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டார், என்று கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி